திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் இலக்கியப் பேரவை விழா மூக்கப்பிள்ளை கலையரங்கில் 03.01.2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர். A.R.பொன்பெரியசாமி தலைமையேற்று தலைமையுரை வழங்கினார். கல்லூரிக்குழுத்தலைவர் திரு.பொன்.பாலசுப்பிரமணியன் மற்றும் கல்லூரிக்குழுச்செயலர் திரு.பொன்.இரவிச்சந்திரன் ஆகியோர் நிகழச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் பெற்றோர் சங்கத் தலைவர் திரு. அ.இராமதாசு கலந்து கொண்டார். திருச்சி காவேரி மகளிர் கல்லூரி நுண்ணுயிரியல் துறைப்பேராசிரியர், திருமதி நா.சாத்தம்மை பிரியா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தனது சிறப்புரையில் ஆசிரியர்கள், பெற்றோர்களை மாணவர்கள் நன்றியோடு நினைத்துப்பார்க்கவேண்டும். இன்றைய இளைய சமுதாயம் நினைத்தால் நாளைக்கு முதியோர் இல்லங்கள் இருக்காது. விளம்பரமோகத்தில் மயங்கி நுகர்வுக் கலாசாரத்தில் மூழ்கிவிடாமல் இளம்பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தன்னம்பிக்கையும், தமிழுணர்வும் பெறவேண்டும். உடையிலும் நிறத்திலும் இல்லை அழகு மனித மனத்தில்தான் உள்ளது. பண்பாட்டுக்குக் குறைவில்லாத உடைகளை இளையவர்கள் அணிய வேண்டாம். அறிவியல் உபகரணங்கள் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும் அவற்றிக்கு நாம் அடிமையாக இருக்கக் கூடாது என்பதை எடுத்துரைத்துப் பேசினார். முன்னதாக தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சோம.இராசேந்திரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மாணவ இலக்கிய மன்றச் செயலர் P.ஸ்ரீகாந்த் நன்றியுரை வழங்கினார்.